இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்துள்ளார்.

மதுரை மாவட்டம் முனியாண்டி புரத்தை சேர்ந்தவர் சரவணகுமார்(27). இவரது மனைவி யோகேஸ்வரி. இந்நிலையில் சம்பவத்தன்று சரவணகுமார் இருசக்கர வாகனத்தில் முனியாண்டி புரத்தில் உள்ள தோட்டத்து வீட்டிற்கு வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த சரவணகுமாரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சரவணகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சரவணகுமாரின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A teenager fell from a twowheeler and died in madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->