நேருக்குநேர் மோதிய இருசக்கரவாகனம் !! கல்லூரி மாணவர் பலி!! - Seithipunal
Seithipunal


சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த இளைஞர்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரேவந்த மற்றறொரு இரு சக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவர் ஒருவரும் இளைஞர் ஒருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்வழியில்  பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதிமக்களிடையே பெரும்சோகத்தை  ஏற்ப்படுத்தியுள்ளது.

தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்த கொருக்குப்பேட்டை காமராஜர் தெருவில் வசித்து வந்த விவேக் (19) சம்பவத்தின்பொது பைக் ஒட்டியதாக கூறப்படுகிறது.சென்னை கொருக்குப்பேட்டை காமராஜர் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பிரபு என்பவருடைய மகன் அபிஷேக். இவருக்கு 18 வயது ஆகிறது.இவர் அந்த பகுதியில் உள்ளள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். நண்பர்களான அபிஷேக் விவேக் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஒரே இருசக்கர வாகனத்தில் சென்னை வடக்கு கடற்கரை ராஜாஜி சாலையில் இருந்து ரிசர்வ் வங்கி நோக்கி சுரங்கப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தார்கள். அப்போது எதிரே எர்ணாவூரைச் சேர்ந்த ரமேஷ் (24) என்பவர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.எதிர்பாராதவிதமாக இந்த 2 இருசக்கரவாகனங்களும்  நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

நடந்த விபத்தில் அபிஷேக், விவேக் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் சுரங்கப்பாதையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி படுகாயம் அடைந்தனர். எதிரே வந்து மோதிய ரமேசுக்கு காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த அபிஷேக், விவேக் இருவரையும் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அபிஷேக் மற்றும் விவேக் இருவரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காலில் காயம் அடைந்த ரமேஷ், சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த சென்னை பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  உயிரிழந்த அபிஷேக் மற்றும் விவேக் ஆகியோரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதைதொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருசக்கர வாகனத்தில்சென்ற நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A two-wheeler collided head-on!! College student killed!!


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->