மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - வாலிபர் உயிரிழப்பு
A twowheeler collided with an electric pole
மின்கம்பம் மீது இருசக்கர வாகன மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தோட்டாவரம் பாலதோப்பு விளை பகுதியை சேர்ந்தவர் செர்லின் (28). இவரது நண்பரான மூவாற்றுமுகம் பகுதியை சேர்ந்த விஜயன்(30) என்பவருடன் செர்லின் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது வியனூர் பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக, அப்பகுதியில் இருந்த மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதியது.
இதில் செர்லின் மற்றும் விஜயன் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், செர்லின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து படுகாயமடைந்த விஜயனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த செர்லினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A twowheeler collided with an electric pole