ஒரு கிராமமே தமிழ்நாட்டை விட்டு வெளியேற முடிவு.. !! என்ன காரணம் தெரியுமா?! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 13 கிராமங்களை உள்ளடக்கிய 5700 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய , மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு அதற்கான பணிகளை தொடங்கின.

இதையடுத்து இங்கு விமான  நிலையம் அமைப்பதற்காக அந்த கிராமங்களில் உள்ள விளை நிலங்களும், குடியிருப்பு பகுதிகளும் அகற்றப்பட உள்ளன. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பறி போய்விடும் என்று அப்பகுதி மக்கள் அங்கு விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தினமும் இரவு நேரங்களில் அந்த ஊரில் உள்ள மைதானத்தில் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கிராம மக்களின் போராட்டம் தற்போது 700ஆவது நாளை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், கடந்த அக்டோபர் மாதமே விமான நிலைய திட்டத்திற்கான நிர்வாக அனுமதியை அரசு வழங்கியது. இதையடுத்து மக்களவைத் தேர்தலை இந்த கிராம மக்கள் புறக்கணித்தனர். 

இந்நிலையில் தற்போது நிலங்களை கையகப் படுத்துவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதனால் அவ்வூர் மக்கள் அனைவரும் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி, ஆந்திராவில் தஞ்சமடைய உள்ளதாக தற்போது அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், " தமிழக அரசு எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை. எனவே நாங்கள் ஆந்திராவில் தஞ்சமடைய முடிவு செய்துள்ளோம். சொந்த மண்ணில் அகதியாக வாழ விரும்பவில்லை. மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாத தமிழ்நாட்டை விட்டு செல்வது எங்களுக்கு பெருமை தான்" என்று கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Village Peoples Decided to Leave TamilNadu


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->