வீழ்ச்சியில் ஆவின்? 70 லட்சம் லிட்டர், 28%  உயர்வு - அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினி, தற்போது 1 கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளதாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மேலும், தமிழ்நாட்டின் ஆவின், மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமாக இருந்தும், அதற்கென ஒரு தனி துறை, அமைச்சர், கணக்கற்ற அதிகாரிகள் இருந்தும் பால் கொள்முதலிலும், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் உற்பத்தியிலும் பல ஆண்டுகளாக ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது.

கர்நாடகாவின் 'நந்தினி' க்கு பாடம் கற்றுத் தந்த தமிழகத்தின் 'ஆவின்' நிலை தற்போது மிக மோசமாக இருக்கிறது. தனியார் பால் நிறுவனங்களோடு போட்டியிட முடியாமல், ஆவின் தொடர்ந்து கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது." என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், கோவை, ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் பால்வளத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று காலை அமைச்சர் மனோ.தங்கராஜ் தலைமையில் கோவையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவிக்கையில், "ஆவினில் பால் கையாளும் திறன் 70 லட்சம் லிட்டராக உயர்த்த திட்டமிடப்பட்டு வருகிறது; பால் விற்பனை 28% அதிகரித்துள்ளது.

அமுல் நிறுவனம் உள்ளே வருவது விவாதத்திற்கான பொருளே இல்லை, உலகமயமாக்கலுக்கு பின் நம்முடைய பொருளை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம்.

பால் கொள்முதலில் பிரச்னை இருக்காது, தேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழ்நாட்டில் ஆவின் கிளைகளை அதிகரிக்க தேவை உள்ளது.

ஆவின் நிர்வாகம் பெரிய முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது" என்று, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aavin For Healthy TN Mano Thangaraj


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->