ஆவின் பால் ஆர்டர் எடுக்கும் நேரம் குறைப்பு! குஷியில் இருக்கும் தனியார் பால் நிறுவனங்கள்! - Seithipunal
Seithipunal


ஆவின் பால் விற்பனைக்காக நியமிக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகள் மொத்தமாக கொள்முதல் செய்து ஓரிடத்திலிருந்து கடைகளுக்கும் நுகர்வோர்களுக்கும் பால்களை விற்பனை செய்வார்கள். அதேபோன்று மளிகை கடை, சூப்பர் மார்க்கெட், டீக்கடைகளுக்கும் நேரடியாக டெலிவரி செய்வார்கள். தமிழகத்தின் செயல்படும் பாலகங்களுக்கு ஆவின் மண்டல அலுவலகம் வாயிலாக நேரடியாக பால் பாக்கெட் சப்ளை செய்யப்படும். 

அவ்வாறு சப்ளை செய்யப்படும் பால் பாக்கெட்களை ஒவ்வொரு நாளும் எவ்வளவு பால் பாக்கெட் தேவைப்படும் என்பதை ஏஜென்ட்கள் மற்றும் பாலகம் நடத்துபவர்களிடமிருந்து இரவு 9 மணி வரை கேட்டறிந்து அதற்கு ஏற்றார் போல் பால் பாக்கெட் அதிகாலை மற்றும் பகல் நேரங்களில் வழங்கப்படும். இந்த நிலையில் ஆவின் நிர்வாகம் தனியார் பால் பாக்கெட் விற்பனையை அதிகரிக்கும் வகையிலான மறைமுக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஆவின் ஏஜென்ட்கள் ஆர்டர் எடுக்கும் பால் பாக்கெட்டுகளின் எண்ணிக்கையை மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என ஆவின் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான குழுவையும் ஆவின் மண்டல அலுவலகங்கள் வாயிலாக நியமித்துள்ளனர். இந்த குழு முந்தைய நாள் மாலை 5 மணிக்குள் தரும் ஆர்டர்களுக்கு மட்டுமே பால் வழங்கும். ஐந்து மணிக்கு மேல் ஆர்டர் செய்யும் பால் சப்ளை செய்ய மாட்டார்கள். 

வழக்கமாக இரவு எட்டு மணிக்கு பின் தான் அடுத்த நாள் பால் எவ்வளவு என்பது விவரம் ஏஜென்டுகளுக்கு தெரிய வரும். அதேபோன்று பண்டிகை, விடுமுறை, சுபமுகூர்த்தம் உள்ளிட்ட நாட்களிலும் அதிக பால் பாக்கெட்டைகளை வாங்கி விற்க முடியாத நிலை ஆவின் ஏஜெண்டுகளுக்கு ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக ஆவின் பால் பாக்கெட்டைகளை வாங்க முடியாமல் தனியார் நிறுவன பால் பாக்கெட்களை வாங்கும் நிலைக்கு நுகர்வோர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தனியார் பால் பாக்கெட் விற்பனைக்கு ஆவின் அதிகாரிகள் மறைமுகமாக உதவி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே பொதுமக்களின் நலனை கருதி ஏஜென்ட்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aavin Milk Agents order taking time change


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->