வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்... அதிரடியாக குறைந்த ஆவின் பால் விலை - எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் ஆவின் நிர்வாகம் சார்பில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் படி இந்தப் பால் அதன் செறிவின் அடிப்படையில் பல்வேறு நிலைகளில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. 

இந்த நிலையில், 90 நாட்கள் கெடாமல் இருக்கும் பால் பாக்கெட்களின் விலையில் 2 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது, நுகர்வோர் அதிக நாட்கள் பயன்படுத்தும் வகையில், தீவிர வெப்பத்தால் சமன்படுத்தப்பட்ட முறையில் தயார் செய்யப்பட்ட 450 மிலி மற்றும் 150 மிலி அளவிலான பால் பாக்கெட்டுகளின் விலையில் இரண்டு ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

அந்த அறிவிப்பின் படி, 450 மிலி பால் இதுவரை ரூ.30-க்கு விற்பனையான நிலையில், இனி ரூ.28-க்கு விற்பனை செய்யப்படும். அதே போல், 150 மிலி பால் இதுவரை ரூ.12-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இனி ரூ.10-க்கு விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்தப் பாலுக்கான மொத்தம் மற்றும் சில்லறை விற்பனைக்கு 93436 17445 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aavin milk price decrease in tamilnadu


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->