திடீர் வேலை நிறுத்தத்தில் இறங்கிய வாகன ஓட்டுனர்கள் - திருச்சியில் ஆவின் விநியோகம் பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் விநியோகம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. பல சர்ச்சைகளில் இந்த நிறுவனம் சிக்கியிருந்தாலும் அதற்கு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆவின் பல் எடுத்துச் செல்லும் வாகன ஓட்டுனர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

அதாவது, திருச்சி மாவட்டத்தில் வாடகை பாக்கியால் ஆவின் பால் எடுத்து செல்லும் வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த நான்கு மாதங்களாக வாடகை கொடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் இன்று ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aavin van drivers strike in trichy


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->