மது போதையில் சாலையோர கடைகள் மீது கார் மோதல்.. வெளிவந்த சிசிடிவி காட்சிகள்..!
Accudent at Kotaikanal
அதிவேகமாக சென்ற கார் சாலையோர கடைகள் மீது மோதி விபத்துக்குள்ளானது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் . இவர் ஏரிசாலை பகுதியில் அவரது சைலோ ரக காரில் வந்து கொண்டிருந்தது. அப்போது அவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகேட்டு ஓடியது. மேலும், அங்கிருந்த சாலையோர கடைகள் மீது மோதியது. இதில், வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பலர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
காரில் இருந்தவர்கள் போதையில் இருந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அவர்களை அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாராணையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.