தூத்துக்குடி : சிறையில் கொடுமை பண்றாங்க - ரத்தத்துடன் கதறி அழுத கைதி.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான ஆதி பரமேஸ்வரன் என்பவர் மீது காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொள்ளை என்று பல வழக்குகள் உள்ளது. இதனால், போலீசார் பரமேஸ்வரனை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். 

அங்கு ஆதி பரமேஸ்வரனுக்கும், மற்ற கைதிகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் போலீசார் அவரை தூத்துக்குடி சிறைக்கு மாற்றியுள்ளனர்.இந்த நிலையில் ஆதி பரமேஸ்வரனுக்கு கடந்த சில நாட்களாக தாங்க முடியாத கால் வலி ஏற்பட்டுள்ளது. 

நாளடைவில் கால் வலி அதிகரித்ததனால் வலியால் துடித்த பரமேஸ்வரனை, போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர் திடீரென கூர்மையான தகரத்தால் கையை அறுத்துக்கொண்டு கொண்டுள்ளார். பின்னர் சிறையில் என்னை கொடுமை படுத்துகிறார்கள் என்றும் சத்தம் போட்டுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை உடனடியாக மருத்துவமனையில்  சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

accuest addmitted in thoothukudi hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->