போலீஸ் கண்ணில் மிளகாய் பொடி தூவிய கைதி - தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் பரபரப்பு.!
accuest escape in thoothukudi bus stand
தூத்துக்குடி மாவட்டம் சுந்தரவேல்புரத்தை சேர்ந்தவர் சின்னத்துரை மகன் ஐகோர்ட் மகாராஜா. இவர் கடந்த மாதம் 20-ந் தேதி விளாத்திகுளம்-வேம்பார் சாலையில் உள்ள ஒரு கடை முன்பு வைத்து ஒருவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசார் ஐகோர்ட் மகாராஜாவை கைது செய்தனர்.
இந்த நிலையில் விளாத்திகுளம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் அவர் மீதான கொலை முயற்சி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஐகோர்ட் மகாராஜாவை ஆஜர்படுத்துவதற்காக பேரூரணி ஜெயிலில் இருந்து ஆயுதப்படை போலீஸ்காரர்கள் இரண்டு பேர் பேருந்தில் அழைத்து வந்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் மாலையில் பேருந்தில் விளாத்திகுளத்தில் இருந்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து இறங்கினர். அங்கு இருந்து தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைப்பதற்காக ஐகோர்ட் மகாராஜாவை அழைத்துச் செல்ல முயன்றனர்.
அப்போது, ஐகோர்ட் மகாராஜா திடீரென, போலீசாரின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பி ஓடினார். இதனால் சற்று நிலை குலைந்த போலீசார் அவரை பிடிப்பதற்காக விரட்டிச் சென்றனர். ஆனால் முடியவில்லை.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐகோர்ட் மகாராஜாவுக்கு மிளகாய் பொடி கிடைத்தது எப்படி? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய ஐகோர்ட் மகாராஜாவை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
accuest escape in thoothukudi bus stand