போலீசுக்குத் தண்ணி காட்டிய கைதி.! கை விலங்குடன் தப்பியோட்டம்.!  - Seithipunal
Seithipunal


போலீசுக்குத் தண்ணி காட்டிய கைதி.! கை விலங்குடன் தப்பியோட்டம்.! 

கடலூர் மாவட்ட மத்திய சிறையில் ஏராளமான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில், திண்டிவனத்தில் ஒரு கொள்ளை வழக்கில் தொடர்புடைய புதுச்சேரியைச் சேர்ந்த அமீர் அப்துல் காதர் என்பவர் கடந்த மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், அப்துல் காதர் காவல்நீட்டிப்புக்காக நேற்று பிற்பகல் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் போலீசார் அவரை மீண்டும் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்து வந்தனர்.

அப்போது, அப்துல் காதர் கடலூர் பேருந்து நிலையத்தில் போலீசாரை ஏமாற்றிவிட்டு கை விலங்குடன் தப்பி ஓடி உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அப்துல் கத்ரை பிடிக்க முயன்றனர்.
ஆனால், அதற்குள் அப்துல் காதர் மறைந்துவிட்டார்.

இது தொடர்பாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், கைதியை அழைத்துச்சென்ற 2 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

accuest escape with Hand cuff in cuddalore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->