ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - கைதான வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை பாயும் - பார் கவுன்சில் முடிவு.! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் கடந்த 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப் பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரைக்கும் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேர் வழக்கறிஞர்கள் ஆவர்.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பார் கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதாவது இந்த வழக்கு தொடர்பாக, காவல்துறையின் அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும், குற்ற வழக்குகளில் தொடர்புடைய வழக்கறிஞர்களை பார் கவுன்சிலில் இருந்து நிரந்தரமாக நீக்குவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருவதால் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பேசியதாவது:- "தமிழகத்தில் குற்ற பின்னணி இல்லாதவர்கள் மட்டுமே வழக்கறிஞர்களாக பதிவு செய்யப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

action against amstrong murder case arrested lawyers bar counsil info


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->