பைக் டாக்ஸி ஓட்டுவோர் கவனத்திற்கு! வணிக நோக்கத்திற்காக இத பண்ணாதீங்க! போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


சென்னை: இந்தியாவில் கார் மற்றும் ஆட்டோவிற்கு பிறகு பைக் டாக்ஸி சேவையின் பயன்பாடு முக்கிய நகரங்களில் அதிகரித்து வருகிறது. ஆனால், இருசக்கர வாகனங்களை வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது மோட்டார் வாகன விதிகளுக்கு விரோதமாக இருக்கிறது.

இந்நிலையில், பல்வேறு நிறுவனங்கள் பைக் டாக்ஸி சேவையை வழங்கி வருகிற நிலையில், இதைத் தொடர்பாக தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் போக்குவரத்து துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளது.

google.com, pub-3004596960618455, DIRECT, f08c47fec0942fa0

மனு ஏற்கப்பட்டதின் பேரில், வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்களைப் பற்றிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதனை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பணியிட உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த விதிகளை மீறுவோரை கண்டறிய சிறப்பு வாகன தணிக்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் தொடர்பாக மண்டல வாரியாக தினசரி மாலை 7 மணிக்குத் தகவல்களை அனுப்புவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களில் பைக் டாக்ஸி சேவைகளின் இயக்கத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Action if you drive a bike taxi Transport department action order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->