தூத்துக்குடியில் திடீர் விசிட் அடித்த நடிகர் ரஜினி - குழப்பத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் ’ஜெயிலர்’ படத்திற்குப் பிறகு ‘லால் சலாம்’, ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ உள்ளிட்ட படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். 

இந்தப் படத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். முதலில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடங்கி, கேரளா, மும்பை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் அவர் வந்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. சமீபத்தில் தென் தமிழக வெள்ள பாதிப்புகளுக்கு ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. 

அதனால், ரஜினிகாந்த் நேரடியாக வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிடுகிறாரா? என்று ரசிகர்கள் சந்தேகம் எழுப்பிய நிலையில், ’வேட்டையன்’ படத்தின் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பிற்காகவே அவர் வந்துள்ளார் என்பது தற்போது தெளிவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor rajinikant come to thoothukudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->