நடிகர் ரஜினி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட முக்கிய பிரபலங்கள்.!
actor rajinikanth home navaratiri celebretion
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் இல்லத்தில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது.
இந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் ஏராளமான சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதாவது தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
இதேபோல், சினிமா பிரபலங்களை பொறுத்தவரை நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், நடிகை லதா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு லதா ரஜினிகாந்த், அவரது மகள்கள் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பைக்கு சென்றுள்ளதால், அவர் இந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
actor rajinikanth home navaratiri celebretion