ஈரோடு பண்ணாரியம்மன் கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு பண்ணாரியம்மன் கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வந்துள்ளார். தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, நான் ஈ, பானா காத்தாடி, தெறி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர் சினிமாவில் இருந்து சில காலம் இடைவேளை எடுத்துக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகை சமந்தா ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அருகே பண்ணாரி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு, அரசியல் மற்றும் சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஐபிகள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். 

அந்த வகையில், பண்ணாரி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு வந்த நடிகை சமந்தாவை, கோயில் நிர்வாகத்தினர் கோயிலுக்குள் அழைத்து சென்றனர். அப்போது, அவருடன் பக்தர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor samantha sami dharisan in pannari amman temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->