சால்வையை தூக்கி வீசிய விவகாரம் - வீடியோ வெளியிட்டு மன்னிப்புக் கேட்ட சிவகுமார்.!
actor sivakumar apologizes for taval throw issue
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று நூல் வெளியீட்டு விழா ஒன்றில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார். அங்கு நிகழ்ச்சி முடிந்து திரும்பிய அவருக்கு முதியவர் ஒருவர் சிரித்த முகத்தோடு சால்வை கொடுக்க வந்தார். ஆனால், அதை வெறுப்புடன் பிடுங்கிய சிவகுமார் தூக்கி விசிறி எறிந்தார்.
இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலானது. இதுகுறித்து நடிகர் சிவகுமார் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்dullaar. அந்த வீடியோவில் தன் நண்பர் கரீமுடன் பேசியிருக்கும் அவர், “காரைக்குடி சால்வை விவகாரத்தை அனைவரும் பார்த்திருப்பீர்கள்.
இவர் யாரோ? எவரோ? கிடையாது. என் தம்பி இவர். எனது ஐம்பது ஆண்டு கால நண்பர். என்னுடைய திருமணத்தில் பல வேலைகளை முன்னிருந்து செய்தவர். இவருடைய திருமணத்தையும் நான் தான் செய்து வைத்தேன். பொதுவாக நிகழ்ச்சிகளில் யாராவது சால்வை போர்த்த வந்தால் அவர்களுக்கே திரும்ப போர்த்தி விடுவேன்.
எனக்கு சால்வை போர்த்தும் பழக்கம் இல்லை. நிகழ்ச்சி முடிய நேற்று பத்துமணிக்கு மேல் ஆகிவிட்டது. சோர்வுடன் இருந்தபோதுதான் கரீம் எனக்கு சால்வை போர்த்துவது பிடிக்காது என்றுத் தெரிந்துமே சால்வையுடன் நின்றிருந்தார்.
தெரிந்தே சால்வையுடன் நின்றிருந்தது அவர் தப்பு என்றால், அதை பொது இடத்தில் வாங்கி கீழே எறிந்ததும் என் தப்பு தான். மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
actor sivakumar apologizes for taval throw issue