வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்: நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூரி.!
actor Soori participation Madurai chithirai festival
உலக புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஜாதி, மதம், பாகுபாடு இல்லாமல் மக்கள் ஒன்றிணைந்து சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
வி.ஐ.பிகள் வரிசை என இல்லாமல் அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்து கொண்டாடிய இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரி மக்களோடு மக்களாக பங்கேற்றார்.
மதுரையில் பிறந்து வளர்ந்த போதிலும் நடிகர் சூரியை பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அவரும் சற்றும் சலிக்காமல் குழந்தைகள், வாலிபர்கள், ரசிகர்கள் என அனைவரிடமும் நின்று செல்ஃபி, புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை முழுமையாக கண்ட உடன் நடிகர் சூரி அழகரை வழிபட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
English Summary
actor Soori participation Madurai chithirai festival