தொடர்ந்து 10 மணி நேரம் மேடையில் நின்ற விஜய் - சோர்ந்து போய் மேஜையில் சாய்ந்து நின்ற சம்பவம்.!!
actor vijay stood in stage for ten hours
தொடர்ந்து 10 மணி நேரம் மேடையில் நின்ற விஜய் - சோர்ந்து போய் மேஜையில் சாய்ந்து நின்ற சம்பவம்.!!
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று சென்னை நீலாங்கரையில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அதன் பின்னர் அவர் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்க தொகையை வழங்கி கௌரவித்தார்.
![](https://img.seithipunal.com/media/20230617_143040-vy6vp.jpg)
இந்த விருது வழங்கும் விழா காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 10 மணியை தாண்டி நடைபெற்றது. அதனால், நடிகர் விஜய் 10 மணிநேரத்துக்கு மேல் மேடையில் நின்று ஒவ்வொரு மாணவருக்கும் தன் கையால் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பொன்னாடை போர்த்தி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்த நிலையில், நடிகர் விஜய் சோர்ந்து போய் மேஜையில் சாய்ந்தபடி நிற்கும் வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. சாப்பிடுவதற்கோ, ஓய்வு எடுப்பதற்கோ கூட நடிகர் விஜய் மேடையைவிட்டு இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
actor vijay stood in stage for ten hours