தொடர்ந்து படுகொலை! அதிமுக வரல..திமுக சினிமாகுள் வரக்கூடாது! கொந்தளித்த விஷால்! - Seithipunal
Seithipunal


நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் எந்த தவறும் இல்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூரில் செய்தியளர்களை சந்தித்த நடிகர் விஷால் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இரண்டு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது என்று தெரியவில்லை.

தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக அரசும் திமுக அரசும் இரண்டு அரசும் இப்படித்தான் செய்கின்ற வருகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் சினிமாதுறை  ரொம்ப கஷ்டப்பட்டு இயங்கி வருகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து படுகொலைகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நடைபெறும் படுகொலையால் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது. தமிழக அரசுக்கு எதிராகவும் ஆதரவாகவும் சினிமா துறையிலிருந்து கருத்துக்கள் வருவதாக கேட்கிறார்கள்.

அரசுக்கு எதிராக அல்ல. அரசியல் சினிமாவுக்கு வருகிறது என்றுதான் கேள்வி எழுப்புகின்றனர். போன அரசு சினிமாக்கு வரவே இல்லையே. அரசு சினிமாவுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை அரசு அவர் துறையை கவனித்தால் போதும். 

 சினிமாத்துறை சினிமா துறையாகவே இருந்தால் போதும் சட்டமன்ற தேர்தலில் வர இருக்கிறது. நேரடியாக அரசியல்களில் இறங்க வேண்டுமா இல்லையே என்று மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

இறங்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டால் வேறு வழி இல்லை. அரசியல்வாதிகள் நடிகர்களாகும் போது நடிகர்கள் அரசியல்வாதிகளால் ஆவதில் எந்த தவறும் இல்லை என இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vishal says there is nothing wrong with actors becoming politicians


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->