'நெபுலைஸ்' பதிவு.. பின்னர் எழுந்த 'எதிர்ப்பு'..தன்னிலை விளக்கம் அளித்துள்ள சமந்தா..!!
Actress Samantha Explained About Her Nebulizer Post
சமீபத்தில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் "வைரஸ் தொற்றுக்களுக்கு ஹைட்ரஜன் பெராக்ஸைடை நெபுலைஸ் செய்வது ஒரு மாற்று வழியாக இருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார். சர்ச்சையைக் கிளப்பிய சமந்தாவின் பதிவிற்கு லிவர் டாக் என்ற ஐடி யில் உள்ள ஒரு மருத்துவர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருந்தார்.
இதுகுறித்து அந்த மருத்துவர் தனது எக்ஸ் பக்கத்தில், "உடல் நலம் குறித்தோ, அறிவியல் குறித்தோ எந்த அறியும் இல்லாத ஒரு இந்திய நடிகை சுவாச தொற்றுக்களுக்கு ஹைட்ரஜன் பெராக்ஸைடை சுவாசிக்கும்படி, தன்னை பின் தொடரும் லட்சக் கணக்கானோருக்கு அறிவுத்தியுள்ளார். ஹைட்ரஜன் பெராக்ஸைடு நெபுலைஸ் செய்வதற்கு உகந்ததல்ல என்று அமெரிக்காவின் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி அறக்கட்டளை எச்சரித்துள்ளது. இந்நிலையில் சமுதாயத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கருத்திட்டிருக்கும் இந்த பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கலாம்" என்று கடுமையாக சாடியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து சமந்தா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், "நான் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வகையான மருந்துகளை நிபுணர்களின் அறிவுறுத்தல்களின் பேரில் எடுத்துக் கொண்டுள்ளேன். மிக நீண்ட காலமாக எடுத்துக் கொண்ட இந்த சிகிச்சைகள் எனக்கு பலனளிக்காததால், நான் மாற்று சிகிச்சையை நோக்கி நகர்ந்தேன்.
நான் எந்த சிகிச்சையையும் போகிற போக்கில் பரிந்துரைக்கவில்லை. எனக்கு பலனளித்த ஒரு சிகிச்சையை நல்ல நோக்கத்திற்காகத் தான் நான் பரிந்துரைத்தேன். இதன் மூலம் நான் பணம் ஈட்ட முயற்சிக்கவில்லை. மேலும் வேறு எந்த தவறான நோக்கமும் எனக்கு இல்லை.
ஆனால் ஒரு மருத்துவர் என் பதிவைத் தாக்கி, மிக கடுமையான வார்த்தைகளை பிரயோகம் செய்துள்ளார். மேலும் நான் சிறையில் அடைக்கப் படவேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். ஒரு மருத்துவத்திற்கு ஆதரவு, எதிர்ப்பு என்று இரண்டு பக்கங்கள் இருக்கும். அதன்படி ஒரு மருத்துவராக அவரது கருத்தும் நல்ல நோக்கத்திற்காகத் தான் என்பதை நான் உணர்ந்துள்ளேன்" என்று சமந்தா குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Actress Samantha Explained About Her Nebulizer Post