கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கை : கல்வராயன் மலையில் ஆய்வு மேற்கொண்ட ஏடிஜிபி டேவிட்ஸன் ..! - Seithipunal
Seithipunal



கல்வராயன் மலையில் நடைபெறும் கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்ஸன் தேவாசீர்வாதம் இன்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மற்றும் விழுப்புரம் சரக டிஐஜி தீஷா மிட்டல் ஆகியோரும் உடன் சென்றனர். 

முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கருணாபுரம், மாதவசேரி, சங்கராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சேஷ சமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் 18ம் தேதி மெத்தனால் கலந்த விஷ சாராயம் அருந்தியதில் 200க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். 

அவர்களில் 67 பேர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தனர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப் படுவதாகவும், மேலும் அங்கு தான் மெத்தனால் கலந்த விஷ சாராயம் விற்கப் படுவதாகவும் தகவல் வெளியானது. 

இதையடுத்து கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அதிரடிப்படையினர் 50க்கும் மேற்பட்டோர் கடந்த 25 நாட்களாக கல்வராயன் மலைப் பகுதியில் முகாமிட்டு தீவிரமான கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் கூடுதல் டிஜிபி டேவிட்ஸன் தேவாசீர்வாதம், வடக்கு மண்டல ஐஜிஅஸ்ரா கார்க் மற்றும் விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல், கள்ளக்குறிச்சி கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி ஆகியோர் கல்வராயன் மலைப் பகுதியில் நடைபெறும் கள்ளச்சாராய கண்காணிப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 

மேலும் இந்த சோதனைச் சாவடிகளில் பிடிபட்ட கள்ளச்சாராய வியாபாரிகளின் பட்டியலை ஆய்வு செய்த உயரதிகாரிகள், மேற்கொண்டு இந்த கள்ளச்சாராய கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க மேற்கொண்டுள்ள உத்திகள் குறித்தும் கேட்டறிந்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADGP Davidosn Inspects Lioqour Eradication Operations in Kalvarayan Hills


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->