அதிமுக - பாஜக கூட்டணி உடைகிறது?! முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
ADMK BJP ALLIENCE 2024
ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலின் போதே அதிமுக-பாஜக இடையான கூட்டணி உடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. காரணம் பாஜகவை ஒரு பொருட்டாகவே அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் மதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
தற்போது அந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாஜகவின் ஐ டி விங்க் பொறுப்பாளர் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்துள்ளது தான் பாஜகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.
ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.,வை பாஜகவில் அண்ணாமலை இணைத்ததை சுட்டிக்காட்டும் அதிமுகவினர், பழிக்குப் பழி என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கே எஸ் செங்கோட்டையனிடம் பாஜகவுடன் கூட்டணி தொடருமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், பாஜக்குடன் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்ய வேண்டியது ஆகும். அதிமுக தனது கொள்கையில் தெளிவாக உள்ளது. சிறுபான்மையினரை காக்கின்ற இயக்கமாக அதிமுக இருந்து வருகிறது என்றார்.
கே எஸ் செங்கோட்டையன் அளித்துள்ள இந்த பதிலும் அதிமுக-பாஜக கூட்டணி உடைய 99 % வாய்ப்புள்ளதாகவே தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.