இதனை என்னால் ஜீரணிக்க முடியவில்லை - நடிகை கஸ்தூரி பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகின்ற ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். 

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஆனால் அதிமுக சார்பில் எந்த ஒரு வேட்பாளரும் போட்டியிடவில்லை. 

இதற்கிடையே விக்கிரவாண்டி தொகுதி சட்டசபை தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் நியாயமாக நடக்காது என்பதால் இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க புறக்கணிக்க கூடாது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்கள் அளித்துள்ள பேட்டியில், 

ஜனநாயக நாட்டில் தேர்தலை மக்கள் புறக்கணிக்க கூடாது. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியான அதிமுக தேர்தலை புறக்கணிப்பது ஏற்புடையதாக இல்லை. அவர் போட்டியிட வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். 

இரட்டை இலை இல்லாமல் ஒரு தேர்தல் நடைபெறுகிறது என்பது தமிழ்நாட்டில் இதுவே முதல் முறை. இதனை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் மறுசீலனை செய்ய வேண்டும் என்பது என்னை போன்ற பலரது கருத்தாக உள்ளது.

தி.மு.க இருக்கும் இடத்தில் அ.தி.மு.க அதனை எதிர்த்துப் போட்டியிட வேண்டும். அப்போதுதான் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய அதிமுகவாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK couldnt digest not competing actress kasthuri


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->