புழல் சிறையில் இருந்தபடியே வீடியோ காலில் 1.47கிலோ மெத்தப்பட்டமைன் கடத்தல் - அதிர்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர்! - Seithipunal
Seithipunal


சென்னை புழல் சிறையில் இருந்தபடியே காசிலிங்கம் என்ற கைதி, தன் மனைவியை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு, சென்னையில் இருந்து இலங்கைக்கு 1.47கிலோ மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் கடத்தியுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக, அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

விடியா திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காமல் இருக்கும் நிலையில், சிறையிலிருந்து ஒரு கைதி போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்பட்டிருப்பது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் புதிய உச்சம்.

ஏற்கனவே திமுக அயலக அணியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் சர்வதேச போதைப்பொருள் மாபியா நடத்திவந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு போதைப்பொருள் மாபியா அம்பலப்பட்டிருப்பது, இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கடத்தலின் முக்கிய மையமாக மாறியிருப்பதையே காட்டுகிறது.

போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடும் கண்டனம்.

தமிழ்நாட்டில் இயங்கும் போதைப்பொருள் கடத்தல் அமைப்புகளை முற்றுமாக ஒழிக்க வேண்டும். இல்லையேல், போதைப்பொருள் புழக்கத்திற்கு பொறுப்பேற்று விடியா திமுக முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும்.

கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை அதிமுகவின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Edappadi Palanisamy Condemn to MKStalin and Resign


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->