#BREAKING | ஒருங்கிணைப்பாளரா? பொதுச்செயலாளரா? என்ன முடிவு! தேர்தல் ஆணையம் ஆலோசனை!
ADMK Edappadi Palaniswami issue EC Urgent Meet April 2023
அதிமுக கட்சி விதிமுறைகளை மாற்றியதை உடனடியாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று, எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பு தற்போது தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளது.
மேலும், அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வலுவிறுத்தியும் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து தேர்தல் ஆணையம் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதிமுக சட்டவிதிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திவரும் ஆலோசனையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு தற்போது இந்த கோரிக்கையை வலியுறுத்தி உள்ளது.
அதே சமயத்தில், எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்ற ஓ பன்னீர்செல்வத்தின் கோரிக்கை குறித்தும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்ந்தெடுத்தது குறித்த ஆவணங்களை அங்கீகரிக்க, தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் 10 நாட்கள் கால அவகாசம் கொடுத்திருந்த நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து வருகிறது.
தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் மற்றும் ஆணையர்கள் , அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
ADMK Edappadi Palaniswami issue EC Urgent Meet April 2023