திமுக உண்ணாவிரதம்! எடப்பாடி கண்டனம்! மத்திய அரசால் கொந்தளிக்கும் தமிழக ஆளும், எதிர்க்கட்சி! - Seithipunal
Seithipunal


இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில் இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது.

மாற்றங்களில் சில விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே இருக்கிறது , முக்கியமாக சட்டத்தின் பெயர்கள் சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் மாற்றப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல மற்றும் மிகுந்த கண்டனத்திற்குரியது என்று, அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

 

மேலும், அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு.

இந்தி திணிப்பாணது பல மொழிகள் - பல கலாச்சாரங்கள் சங்கமித்திற்கும் நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது, இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்களை மாற்றியமைத்து இச்சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நெறிப்படுத்தி, சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் உள்ள சட்டத்தின் பெயர்களை மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்யவேண்டுமென்று மத்திய அரசை எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.


இதற்கிடையே, திமுக சட்டத்துறை மாநில நிர்வாகிகள் மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மத்திய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து ஜூலை 5ஆம் தேதி மாவட்ட நீதிமன்றங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர் இளங்கோ எம்.பி தலைமையில் ஜூலை 6ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் தமிழகம் முழுவதும் கண்டன கருத்தரங்குகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Condemn and DMK Fasting Protest against Central Govt


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->