அண்ணாமலையின் திமுக சொத்து பட்டியல் - ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி!
ADMK EPS say about Annamalai DMK File
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட உள்ளது குறித்து, அண்ணாமலை இடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியல் வெளியிட உள்ளார். இது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி அதை நீங்கள் அண்ணாமலை அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்று பதில் கொடுத்தார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வருகின்ற 16ஆம் தேதி அதிமுகவின் செயற்குழு கூட்டம் கூடுகிறது.
இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. மூத்த கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது அல்லது ஆதரவு தெரிவிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
English Summary
ADMK EPS say about Annamalai DMK File