அதிமுக முன்னாள் அமைச்சர் தலையில் இடியை இறக்கிய சென்னை உயர்நீதிமன்றம்! அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் வின்சென்ட் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

1977 மற்றும் 1980ம் ஆண்டு, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் இருந்து  எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட வின்சென்ட், முன்னாள் அமைச்சராகவும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

 

தற்போது வின்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலராக இருக்கும் வின்சென்ட், அந்த அறக்கட்டளை சார்பில் வில்லுக்குறியில் இயங்கும் பொறியியல் கல்லூரிக்காக உரிய அனுமதியின்றி 3 மாடி கட்டடத்தை கட்டியதாக புகார் எழுந்தது.

கட்டடம் கட்ட நெல்லை நகரமைப்பு துறை உதவி இயக்குநர் நாகராஜன் உடந்தையாக செயல்பட்டதாக ஜஸ்டின் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

2022ல் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வின்சென்ட் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

வின்சென்ட் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், குற்றச்சாட்டுகளுக்கு போதிய அளவுக்கு ஆதாரங்கள் இருப்பதால் இந்த வழக்கின் விசாரணையில் தலையிட காரணம் எதுவும் இல்லை என்று கூறி, வின்சென்ட் தாக்கல் செய்த மனுவை ரத்து செய்து உத்தரவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Ex Minister case Madras HC


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->