100 கோடி நிலமோசடி! கைது செய்யப்படுவதிருந்து தப்பிக்க அதிமுக முன்னாள் அமைச்சர் எடுத்த கடைசி முயற்சி! - Seithipunal
Seithipunal


கரூர் : நிலமோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது, கரூர் வாங்கல் காவல் நிலையத்தில்  6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மீண்டும் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகாவை சேர்ந்தவர் பிரகாஷ் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை, அவரின் மக்களுக்கு கொடுத்துள்ளார்.

இந்த நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையத்தில் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் பிரகாஷ் புகார் அளித்தார். 

இது தொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது தொடரப்பட்ட நிலமோசடி வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டது. 

இந்த நிலையில், பிரகாஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று கரூர், வாங்கல் காவல் நிலையத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.100 கோடி மதிப்புள்ள நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பெயர் சேர்க்கப்பட்டு கொலை மிரட்டல், போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நில மோசடி வழக்கில் முன் ஜாமின் கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.

தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை உடனிருந்து கவனிக்க வேண்டும் என்று, தனது முன் ஜாமின் மனுவில் எம்.ஆர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டு உள்ளார்.

ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் எப்போது வேண்டுமானாலும் போலீசாரால் கைது செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தார். 

தற்போது தாக்கல் செய்துள்ள அவரின் முன்ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Ex Minister MR VijayaBaskar Bail case file again


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->