நீதிமன்றத்தில் ஆஜராகிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார்! கைது செய்யுமா அமலாக்கத்துறை? பரபரப்பு!
DMK Senthilbalaji case ashok kumar
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைக் சட்டம் (PMLA) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவரது சகோதரர் அசோக் குமார் இன்று (ஏப்ரல் 9) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
இந்த வழக்கு, செந்தில் பாலாஜி மீதான பணப் பரிமாற்ற மோசடி மற்றும் கருப்பு பணம் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) மேற்கொண்ட விசாரணையின் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இதில் முக்கிய சாட்சியாகவும், சந்தேகிக்கப்படும் நபராகவும் காணப்படும் அசோக் குமார், கடந்த காலங்களில் ஏற்கனவே நீதிமன்றத்துக்கு வராமல் இருந்ததால், அவரை கைது செய்ய அமலாக்கத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில், அவர் இன்று தானே நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். குற்றப்பத்திரிகை நகல் வாங்க இன்று ஆஜராக வேண்டும் என்று அசோக் குமார், செந்தில்பாலாஜி உள்ளிட்ட 13 பேருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது அசோக் குமார் ஆஜராகியுள்ளார்.
இன்னும் சற்று நேரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியும் ஆஜராக உள்ளார் என்று தெரிகிறது.
மேலும், அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
English Summary
DMK Senthilbalaji case ashok kumar