திமுக அமைச்சரின் மகனுக்கு சிக்கல்? முக்கிய புலிகளிடம் அமலாக்கத்துறை விசாரணை!
DMK Minister MP KNNehru ED raid
சென்னையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாக சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு வருகின்றனர். இதில், திமுக எம்.பி. அருண் நேருவின் பங்குதாரராகத் திகழும் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அருண் நேருவுடன் தொடர்புடைய இரண்டு தனியார் நிறுவனங்களில் இயக்குநர்களாக பணியாற்றும் நபர்கள், இன்று நேரில் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த நிறுவனங்களில் இடம்பெற்ற நிதிச் செலவுகள், முதலீடுகள் மற்றும் வருமானங்கள் தொடர்பான விபரங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிரமாக கேட்டறிந்துள்ளனர்.
மேலும், ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அமைச்சரின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரனின் வீட்டில் விசாரணை நடத்துவதற்காக அந்த இடத்திற்கே அவர்களை அழைத்துச் சென்றனர்.
அங்கு, சம்பந்தப்பட்ட ஆவணங்கள், பங்குத் தரவுகள் உள்ளிட்ட பல விவரங்களை வைத்து நேரடியாக சந்தேகங்களுக்கு பதில்கள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
English Summary
DMK Minister MP KNNehru ED raid