அவசர அவசரமாக நீதிமன்றம் ஓடிய எடப்பாடி பழனிசாமி! இன்னும் 20 நாள் கூட இல்லையே!
ADMK GS EPS In Delhi HC For Karnataka Election 2023
கர்நாடக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதால், பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள அந்த ரிட் மனுவில், "கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தரப்பில் வேட்பாளர்களை நிறுத்த கட்சி திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கான பணிகளும் நடந்து கொண்டு இருக்கிறது.
கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான கோலார், கோலார் தங்க வயல், காந்திநகர் ஆகிய இடங்களில் போட்டியிட்டு உள்ள அதிமுக, வெற்றி பெற்று உள்ளது.
இந்நிலையில், வருகின்ற மே மாதம் 10 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய, சின்னம் கோர இன்னும் 20 நாள் கூட இல்லை.
எனவே, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வகையில், கடந்த வருடம் ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், அந்த தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, அவற்றை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிட வேண்டும் என்று அந்த ரெட் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம்.சிங் வரும் 10ம் தேதி விசாரணை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
English Summary
ADMK GS EPS In Delhi HC For Karnataka Election 2023