சிதம்பரம் தொகுதியில் விசிகவை பின்னுக்குத் தள்ளிய அதிமுக.! - Seithipunal
Seithipunal


நாட்டில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தொடர் ஓட்டம்போல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து விட்டது. இந்த பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. 

இதில் அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2-ந் தேதி முடிவடைந்ததால், அந்த 2 மாநிலங்களுக்கும் 2-ந் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் நாடு முழுவதும் பதிவான ஓட்டுகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு, அதில் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் விவரம் பற்றி உடனடியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. 

அதன் படி தமிழகத்தில் சிதம்பரம் தொகுதியில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் திருமாவளவன் பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk leading in chithambaram constituency at lokshabha election 2024


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->