அதிமுக சார்பில் "மே தின விழா பொதுக்கூட்டங்கள்" - இபிஎஸ் அறிவிப்பு.!!
admk public secretary announce may day meeting
ஒவ்வொரு வருடமும் மே மாதம் ஒன்றாம் தேதி தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இந்த தினத்தை கொண்டாடும் விதமாக அதிமுக சார்பில் மே தின விழா கொண்டாடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- "மே" தினத்தைக் கொண்டாடும் விதமாக, அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில், அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும், வருகிற 1-ந் தேதி வியாழக்கிழமை அன்று "மே தின விழா பொதுக்கூட்டங்கள்" நடைபெற உள்ளன.
இந்த கூட்டங்களில் கழக சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகளும், கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
admk public secretary announce may day meeting