கோயில் திருவிழாவில் ஒயிலாட்டம் ஆடிய அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி.. வைரல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் முக்கிய புள்ளியாக இருப்பவர் எஸ் பி வேலுமணி. இவர் கொங்கு மாவட்டத்தில் திமுகவிற்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். இதில் கோவை பகுதியில் நடைபெறும் எந்த ஒரு கோயில் திருவிழாவிற்கும் நேரில் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.

அதன்படி ஏற்கனவே கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் கிராமத்தில் பழமையான மாரியம்மன் கோயில் ஒன்றில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து  கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வள்ளி கும்மியாட்டம் மற்றும் ஒயிலாட்டம் போன்ற நடனம் ஆடினார்.


அதேபோல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது அதிமுகவிற்கு வாக்குகளை சேகரிக்க பொதுமக்களை கவரும் வகையில் நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோவை மாவட்டம் குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அதிமுக கழக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி கலந்து கொண்டு ஒயிலாட்டம் ஆடி அசத்தியுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK SP Velumani dance video viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->