பணி ஓய்விற்கான சான்றிதழ் பெற்றார் ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை.!  - Seithipunal
Seithipunal


பல்வேறு மாவட்டங்களின் எல்லைகள் கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கூடுதல் எஸ்.பி.யாக வெள்ளத்துரை நியமிக்கப்பட்டார். இதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் எல்லைகளும் அடங்குவதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுவர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப் பஞ்சாயத்து, மாமூல் வசூலை தடுக்கவும், ரவுடிகளை ஒடுக்கவும் ரவுடிகள் ஒழிப்பு சிறப்புப் படை கூடுதல் எஸ்.பி.யாகவும் இவர் நியமிக்கப்பட்டார். 

இவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் ராமு வயது என்கிற கொக்கி குமார், காவல்துறையின் காவலில் இருந்த போது உயிரிழந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்ற ரீதியில் சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் 2003 ஆம் ஆண்டு அயோத்திக்குப்பம் வீரமணியை வெள்ளதுரை கொன்றபோது, ​​மெரினா காவல் நிலைய முன்னாள் காவல் ஆய்வாளர் லாயிட் சந்திராவிடம் உள்துறை விசாரணை நடத்தியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு வழக்குத் தொடர்பாக உள்துறை செயலகம் விசாரணை நடத்தியதில் வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இதற்கிடையே, வெள்ளதுரையின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து உள்துறைச் செயலர் அமுதா நேற்று இரவு உத்தரவிட்டார். இதையடுத்து, வெள்ளதுரை நேற்று இரவு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் இருந்து முறைப்படி பணி ஓய்வுபெற்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

adsp velladurai received retirement certificate


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->