என்கவுண்டர் ஸ்பெலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்ட் நிறுத்திவைப்பு! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பியாக இருந்த வெள்ளத்துரை பணியிட நீக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது 

கடந்த 2003 ஆம் ஆண்டு சென்னையில் பிரபல தாதாவான அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்தவர் வெள்ளத்துரை. மேலும் இவர் என்கவுண்டர் ஸ்பெலிஸ்ட் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.

தற்போது திருவண்ணாமலை குற்ற ஆவணக் காப்பக ஏ.டி.எஸ்.பியாக பணியாற்றி வந்த வெள்ளத்துரைக்கு, கடந்த 2013ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தியில் ராமு என்கிற குமார் என்ற கொக்கி குமார் என்பவர், போலீஸ் காவலில் இருந்தபோது மரணமடைந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையின் முடிவில் வெள்ளத்துரை மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. டிஜிபி சங்கர் ஜிவால் வெள்ளத்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என பரிந்துரை செய்து இருந்தார்.

இருப்பினும், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடையிலான பணிப்போரினாலே தான் வெள்ளதுரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிட நீக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADSP Velladurai Suspend Order hold


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->