தமிழுக்காக "வழக்கறிஞர்கள்" 2வது நாளாக உண்ணாவிரதம்.!!
Advocates hunger strike for need Tamil as judicial language
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிக்க வேண்டு என நீண்ட வருட கோரிக்கையாக இருந்து வருகிறது. பிராந்தி மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றமும் கருத்து தெரிவித்தோடு, பிராந்தி மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வெளிட முடிவு செய்துள்ளது
இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில் 2வது நாளாக வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நீதிமன்றங்களில் வழக்கு மொழியாக ‘தமிழ்’ அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Advocates hunger strike for need Tamil as judicial language