மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு - பொதுமக்கள் அச்சம்.! - Seithipunal
Seithipunal


பெஞ்ஜல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை உச்சியில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து பாறை ஒன்று உருண்டு வந்தது.

இந்த பாறை, வ உ சி. நகர் தெருவில் வீடுகளின் மீது விழுந்தது. இதில் மூன்று வீடுகளில் இருந்த 7 பேர் சிக்கி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் 80-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே மீட்பு பணிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு, தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

இந்த நிலையில் திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் மேலும் ஓரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே ஒரு இடத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 7 பேர் மாயமாகி உள்ள நிலையில் மேலும் ஒரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே மண் சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகிலேயே மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

again land slide in thiruvannamalai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->