2026-ல் பாஜகவுடன் கூட்டணி? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


2026-ல் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கையில், "தமிழ்நாட்டுக்கு 8 முறை வந்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ரோடு ஷோ நடத்தினார்கள், இருந்தும் பாஜக வெற்றி பெறவில்லை.

திமுக மற்றும் பாஜக தங்களின் கூட்டணி பலத்தோடு தேர்தலை எதிர்கொண்டது. அதிமுகவை பொறுத்தவரை நான் ஒருவன் மட்டுமே பிரசாரம் செய்தேன். 

ஊடகங்கள், பத்திரிக்கைகளின் எந்தவித ஆதரவும் இல்லாத சூழ்நிலையில் அதிமுக மற்றும் கூட்டணி 2019 தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 2024 தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றுள்ளது மகிழ்ச்சி.

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது மாறி மாறி தான் வரும். அதற்காக அரசியலில் பின்னடைவு என்பதெல்லாம் திட்டமிட்டு பரப்பப்படுகின்ற பொய்யான செய்தி.

பாஜக வளர்ந்து விட்டது என்று ஊடகங்களும் பத்திரிகைகளும் பொய்யான தகவல்களை தெரிவித்து வருகிறது. அண்ணாமலை கருத்து குறித்து என்னிடம் கேட்க என்ன இருக்கு? அவர் விலகியிருக்கின்ற நிலையில் அவர் ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார் இதில் நான் சொல்ல என்ன இருக்கு? 

2024 தேர்தலில் தி.மு.க, பா.ஜ.கவை ஒப்பிடுகையில் அ.தி.மு.க தான் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது. 2019 மக்களவை தேர்தலைவிட 2024 தேர்தலில் அ.தி.மு.க ஒரு சதவீதம் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது. இதுவே எங்களுக்கு வெற்றி தான்.

அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான். 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK DMK BJP Annamalai Edappadipazhanisamy PMModi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->