திடீர் திருப்பம்! ரூ.100 கோடி நில மோசடி! எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின்! - Seithipunal
Seithipunal


ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான  நிலத்தை போலி பத்திரம் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக நிலம் உரிமையாளர் பிரகாஷ் வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறை விஜயபாஸ்கரை தீவிரமாக தேடி வந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி கேரளாவில் வைத்து போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

அதனைத் தொடர்ந்து கொலை மிரட்டல் நில மோசடி உள்ளிடையில் வழக்குகளிலும் தனக்கு ஜாமின் வழங்க கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கரூர் குற்றவியல் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இரு வழக்குகளிலும் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறு உத்தரவு வரும் வரை சிபிசிஐடி அலுவலகம் மற்றும் வாங்கல் காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை என இரு வேலைகளிலும் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK ex minister MR Vijayabhaskar granted conditional bail in Rs 100 crore land fraud case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->