சித்து விளையாட்டு... சிக்கவைத்த திமுக! பதறாமல் பதிலடி கொடுக்கும் அதிமுக தரப்பு! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டவர்களை அதிமுகவில் மீண்டும் இணைத்து, அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தியதாக ஒரு பத்திரிக்கையாளர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருந்தார். 

இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பத்திரிக்கையாளரின் அந்த கருத்துக்கு அதிமுகவினர் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதில், அதிமுகவை சேர்ந்த ராஜ் சத்யன் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "எப்போதெல்லாம் இந்த விடியா திமுக அரசு மீளமுடியாத சிக்கலுக்கு உள்ளாகிறதோ, அப்போதெல்லாம் தங்கள் எஜமானர்களைக் காப்பாற்ற ஓடோடி வந்துவிடுவார்கள் நம் அரசியல் "நோக்கர்கள்"!

அஇஅதிமுகவில் இது நடக்கிறது, அது நடக்கிறது என்று ஊடக வாசல்தோறும் சென்று ஏகத்திற்கும் அளந்துவிட்டு, அதை ஒரு பூதாகர விஷயமாக இவர்களே பெரிதாக்கிவிட்டு, இதனை வைத்து கள்ளச்சாராயம், போதைப்பொருள், சட்டம் ஒழுங்கு என விடியா திமுக அரசை சுழன்றடிக்கும் மக்கள் பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்ப முயல்வதெல்லாம் கருணாநிதி காலத்து டெக்னிக்! 

ஆனால், பிரதான ஊடகங்களும் இதனை எவ்வித சரிபார்ப்பும் இன்றி வெளியிட்டு விவாதிப்பது தான் ஆச்சரியமாக உள்ளது.

இந்த திரைக்கதையை பேசிக்கொண்டிருப்போர் அனைவரும் தங்கள் கேமராக்களைக் கொண்டு எம்ஜிஆர் மாளிகை நோக்கினால் உண்மை தெரியும். 

கழகத்தை வழிநடத்தும் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி  அவர்கள் தலைமையில் கழக மூத்தவர்கள் தொகுதி வாரியாக ஆலோசனைகளை மேற்கொண்டு, 2026 நோக்கிய பயணத்தை கட்டமைத்துக்கொண்டு இருக்கின்றனர்! 

எங்கள் லட்சியம் உயர்வானது- பார்வை தெளிவானது- வெற்றி உறுதியானது!

அதனால் இதுபோன்ற சித்து விளையாட்டுகளை விடுத்து, மக்கள் நலன் சார்ந்து நாங்கள் இதுவரை கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில்சொல்லப் பாருங்கள் திமுக அறிவாலயமே என்று ராஜ் சத்யன் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK OPS Edappadik palaniswami Sasikala TTV Sasikala DMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->