காவல் நிலையத்தில் பரபரப்பு! தாக்க முயன்ற வழக்கறிஞர்! மண்டைய உடைத்த அதிமுக பெரும் புள்ளி! - Seithipunal
Seithipunal


மதுரையில் வழக்கறிஞர் தாக்கிய சம்பவம் தொடர்பாக அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகே உலகநாத சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. அந்த வணிக வளாகத்தின் பொறுப்பாளராக வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். வணிக வளாகத்தில் மேலூரை அடுத்த புஞ்சுத்தியின் ஊராட்சி தலைவராக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த ராமநாதன். இவர் அந்த வணிக வளாகத்தில் கடை வைத்து நடத்தி வருகிறார்.

அதிமுகவை சேர்ந்த ராமநாதன் கடைக்கு உண்டான வாடகை தொகையை தொடர்ந்து செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக கடையின் வாடகையே செலுத்தாத காரணத்தினால் கடையை காலி செய்யும்படி வழக்கறிஞர் விஜய பாரதி கூறியதாக  தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக வழக்கறிஞர் விஜய பாரதி மேலூர் உரிமையியல் நீதிமன்றத்தில் மடத்திற்கு சொந்தமான கடையை அவர் காலி செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர் தரப்பில் ராமநாதன் நடத்தி வந்த கடையை பூட்டியதுடன் கடைக்கான மின்சார இணைப்பையும் துண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கடையை அவர் மீண்டும் திறக்க முடிந்ததால் இரு தரப்பிற்கும் இடையே வாய் தவறாக ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இரு தரப்பும் மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். அங்கு மீண்டும் அவர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது. 

வழக்கறிஞர் விஜய பாரதி தலையில் அவரது சகோதரர் விக்ரம் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வழக்கறிஞர் விஜய பாரதி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மோதல் சம்பவம் தொடர்பாக அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன் மற்றும் அவரது நண்பன் முருகன் ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK panchayat council leader arrested in connection with attack on lawyer in Madurai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->