அதிமுக அவைத்தலைவருக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! இன்னும் சற்று நேரத்தில் செயற்குழு! - Seithipunal
Seithipunal


சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்னும் சற்று நேரத்தில் (பிற்பகல் 2 மணியளவில் ) அக்கட்சியின் செயற்குழுக்கூட்டம் நடைபெற உள்ளது.  

இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்திற்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தாலமி தங்க உள்ளார்.

மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சில முக்கிய முடிவுகளை இந்த கூட்டத்தில் எடுக்க உள்ளதாக தெரிகிறது.

அதில் குறிப்பாக கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அல்லது தனித்து போட்டி ஆகிய இரு முடிவுகளில் ஒன்று எடுக்க வாய்ப்பு உள்ளது. 

இந்நிலையில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு மஹேந்திரா காரை அதிமுக சார்பாக பரிசாக வழங்கபட உள்ளது.

செயற்குழு கூட்டத்திற்கு பின் புதிய கார் சாவியை தமிழ்மகன் உசேனிடம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Seyarkuzhu Tamilmahan usen car gift


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->