சூப்பர்!அதிமுக சார்பில் 21ஆம் தேதி நடைபெறும் இப்தார் நிகழ்ச்சி - EPS பங்கேற்கிறார் - Seithipunal
Seithipunal


 சென்னை அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் தற்போது செய்திக் குறிப்பு ஒன்று வெளியியாகியுள்ளது.

அதில் குறிப்பிட்டிருப்பதாவது,"அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன்படி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ந்தேதி மாலை 5.30 மணியளவில் சென்னை எழும்பூர் புகார் சிராஜ் ஹாலில் இப்தார் விருந்து வழங்கவுள்ளார்.

மேலும் இந்நிகழ்ச்சியில், இஸ்லாமிய சமுதாய மக்கள், கழகத்தில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பணியாற்றி வரும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்" என அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது.

இதற்கு முன்பு த.வெ.க கட்சி தலைவர் விஜய் இப்தார் விருந்து அளித்ததையடுத்து அ.தி.மு.க. தற்போது விருந்து அளிக்கவுள்ளது.

இது அரசியல் ஆர்வலர்களிடையே தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMKs Iftar program to be held on the 21st EPS will participate


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->