விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு: பண மோசடியில் ஈடுபட்ட வாலிபரை தட்டி தூக்கிய போலீசார்!
airport Job opportunities money cheating youth arrested
தூத்துக்குடி, இந்திரா நகரை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி ராணி. இவரது செல்போனுக்கு திருச்சி விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக குறுஞ்செய்தி வந்தது.
அதனை பார்த்த ராணி அந்த வேலையில் தனது மகனை சேர்த்து விடுவதற்காக அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.
எதிர்முனையில் பேசியவர் வேலைக்காக பல்வேறு காரணங்களை தெரிவித்து ரூ. 16 லட்சத்து 61 ஆயிரம் பணத்தை ராணியிடமிருந்து பெற்றும் வேலை வாங்கி தராததால் ராணி தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து கொண்டு இது தொடர்பாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் சைபர் குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ராணியிடம் பண மோசடி செய்தவர் டெல்லியைச் சேர்ந்த மொஹத் அபுஷார்கான் (வயது 22) என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து சைபர் கிரைம் போலீசார் டெல்லிக்கு சென்று டெல்லி போலீசாரின் உதவியுடன் மொஹத் அபுஷார்கானை கைது செய்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.
பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மொஹத் இதே போல் பல்வேறு நபர்களிடம் வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக பேசி பண மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
பின்னர் அவரை தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு நேற்று அழைத்துச் சென்று நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரத்தில் பல்வேறு நபர்கள் ஈடுபட்டிருப்பதால் போலீசார் அவர்களையும் கைது செய்ய தீவிர விசாரணை விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
airport Job opportunities money cheating youth arrested