துணிவு, வாரிசு திரைப்படம் கொண்டாட்டம்.. ரசிகர்கள் 12 பேர் மீது வழக்குப் பதிவு.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிதுள்ள திரைப்படம் 'வாரிசு'. இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ஷாம், சரத்குமார், பிரபு, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் நடித்துள்ளார்கள்.

அதேபோல் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் துணிவு. இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் மலரும் அடித்துள்ளனர்

இந்நிலையில், நேற்று உலகம் முழுவதும் நள்ளிரவு 1 மணிக்கு அஜித்தின் துணிவு படம் வெளியானதை அடுத்து, விஜய்யின் வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கு வெளியானதனால் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளிலும், சாலைகளிலும் விதிகளை மீறி ரசிகர்கள்  பொதுமக்களுக்கு தொந்தரவு தரும் வகையில் வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.

இந்த நிலையில் மதுரையில் விதிகளை மீறி வாகன ஊர்வலங்களில் ஈடுபட்டதாக அஜித், விஜய் ரசிகர்கள் 12 பேர் மீது மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் செயல்படுவது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith and Vijay fans case filed in Madurai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->