அனைத்து வீடுகளிலும் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் வகையில் 'சுதந்திர தின அமிர்த பெருவிழா' என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. 

இதன் ஒரு அங்கமாக 'இல்லம் தோறும் தேசிய கொடி' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதன்படி, வருகிற 13-ந் தேதி முதல் சுதந்திர தினமான 15-ந்தேதி வரையிலான 3 நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேசிய அளவில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா என அனைத்து வீடுகளிலும் ஆகஸ்டு 13ம் தேதி -15ம் தேதி வரை மூவர்ண தேசிய கொடியை ஏற்றி, தேசப்பக்தி உணர்வை மேலும் வலுப்படுத்தும் விதமாக கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி 13ம் தேதி - 15ம்தேதி வரை அனைத்து வீடுகளிலும், கடைகளிலும், அரசு கட்டிடங்கள், வணிக வளாகங்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் போலீஸ் நிலையங்களிலும் தேசியகொடி ஏற்றுவது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேசிய கொடி தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதிப்படுத்தவும் சென்னை மாநகராட்சி சார்பில் வணிகர் நலச் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, பூக்கடை, மார்க்கெட் மற்றும் பாண்டி பஜார் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேசிய கொடி தட்டுப்பாடின்றி கிடைக்கவும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

All houses national Flag From tomorrow Chennai corporation


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->